கேப்டனாகும் ரிஷப் பண்ட்; தோனி, ராகுல் வரிசையில் சிக்கல் - வெடிக்கப்போகும் மோதல்!
லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷப் பண்ட்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா. சில ஆண்டுகளுக்கு முன் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் என்ற அணியை நடத்தி வந்தார்.
அப்போது அந்த அணியின் கேப்டனாக 2016ல் தோனி நியமிக்கப்பட்டிருந்தார். அந்த சமயம் அந்த அணி தோல்விகளை சந்தித்ததால் தோனி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
அதேபோல் 2024ல் கே எல் ராகுலுக்கும், சஞ்சீவ் கோயங்காவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் அந்த அணியில் இருந்து விலகினார். தற்போது ரிஷப் பண்ட்டை லக்னோ அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அவரை கேப்டனாகவும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, சஞ்சீவ் கோயங்கா போன்ற ஒரு அணி உரிமையாளருடன் ரிஷப் பண்ட் இணக்கமாக செயல்பட முடியுமா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் ரிஷப் பண்ட் அந்த அணியில் இருந்து விலகி ஏலத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.