சிஎஸ்கே பிளே-ஆஃப் கூட போகமுடியாது - ஆப்பு வைக்கப் போவதே இவங்கதான்..

Ravindra Jadeja Chennai Super Kings Ajinkya Rahane IPL 2024
By Sumathi Apr 06, 2024 04:47 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

 சிஎஸ்கே அணி

 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான பேட்டிங் காரணமாக தோல்வி அடைந்தது.

csk

இதற்கு முக்கிய காரணம் அஜின்க்யா ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜா படுநிதான ஆட்டம் ஆடுவது தான் எனக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு போட்டிகளிலும் பவர் பிளே ஓவர்களின் போதே ரஹானே களமிறங்கி நிதான ஆட்டம் ஆடி அணியின் ரன் ரேட்டை உயர்த்த விடாமல் செய்கிறார்.

IPL 2024- Impact Player - "தல" எம்.எஸ்.தோனி போடும் Sketch..?

IPL 2024- Impact Player - "தல" எம்.எஸ்.தோனி போடும் Sketch..?

ஸ்ட்ரைக் ரேட் 

கடந்த இரண்டு போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவும் மோசமாகவே ஆடி இருக்கிறார். 17 பந்துகளில் 21 ரன்களும், 23 பந்துகளில் 31 ரன்களும் தான் எடுத்துள்ளார். பவர் பிளே மற்றும் கடைசி 5 ஓவர்களில் மற்ற அணிகள் வெளுத்து வாங்கி ரன் குவிக்கின்றனர்.

சிஎஸ்கே பிளே-ஆஃப் கூட போகமுடியாது - ஆப்பு வைக்கப் போவதே இவங்கதான்.. | Ipl 2024 Rahane And Jadeja Strike Rates Risk Csk

ஆனால், அந்த இடத்தில் தான் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. பிளே-ஆஃப் சுற்றுக்கே முன்னேறாத 2020 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணிக்கு பெரிய சிக்கலாக இருந்தது இதே ஸ்ட்ரைக் ரேட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.