இது மட்டும் நடந்தால் ஆர்சிபி, டெல்லி காலி - சிஎஸ்கே பிளே ஆஃப் போவது உறுதி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் ஒரு லீக் போட்டி மட்டுமே மீதம் உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
அதில், சிஎஸ்கே வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் இடம் பிடித்து நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதியாகும். ஆனால் தோல்வியடைந்தாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பிளே ஆஃப் சுற்று
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்று தோல்வி அடைய வேண்டும். அப்படி நடந்தால், ஆர்சிபியால் அதிக நெட் ரன் ரேட் பெற முடியாது. அதேவேளை சிஎஸ்கே 14 புள்ளிகளுடன்,
அதிக நெட் ரன் ரேட் பெற்று பெங்களூரு அணியை விட முன்னிலையில் இருக்கும்.
மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி இரண்டு லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும்.
இந்த இரண்டும் நடந்தால் சிஎஸ்கே பிளே ஆஃப் போவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.