ஆர்சிபி ஜெயிச்சா கூட பிளே-ஆஃப் போக முடியாது - சிஎஸ்கே போடும் ஸ்கெட்ச்!
முக்கிய போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி மோதவுள்ளன.
CSK vs RCB
2024 ஐபிஎல் தொடரின் முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இதில் சிஎஸ்கே வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும்.
ஆர்சிபி வெற்றி பெற்றாலும் கூட அவ்வளவு எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட முடியாது. குறிப்பிட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நெட் ரன் ரேட்டில் சிஎஸ்கேவை முந்தினால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை உள்ளது.
பிளே ஆஃப்?
சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 230 அல்லது 240 ரன்கள் குவித்தால் பெங்களூரு அணிக்கு சிக்கல் அதிகமாகிவிடும். அந்த அணி அதிக பந்துகள் மீதமிருக்கும் வகையில் சேஸிங் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கும் குறைவாக ஸ்கோர் எடுத்தால் சிஎஸ்கே கடைசி ஓவர் வரை சென்று கூட தோற்றாலும் கூட பெங்களூரு அணியால் சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட்டை முந்த முடியாமல் போகும்.
இதன்படி, சிஎஸ்கே பவுலிங் மற்றும் பேட்டிங்கில் கடுமையாக அழுத்தம் கொடுத்தால் ஆர்சிபியை பிளே ஆஃப்க்கு முன்னேற விடாமல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.