IPL போட்டி: மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் - ஆனால் ஒரு கண்டிஷன்!

Chennai Super Kings Cricket Tamil nadu Chennai IPL 2024
By Jiyath Mar 21, 2024 05:07 AM GMT
Report

ஐபிஎல் போட்டியை காண சென்னை சேப்பாக்கம் வரும் ரசிகர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லை என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி (நாளை) தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளனர்.

IPL போட்டி: மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் - ஆனால் ஒரு கண்டிஷன்! | Ipl 2024 City Buses Free For Fans To Chepauk

இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியை காண சென்னை சேப்பாக்கம் வரும் ரசிகர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லை என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இந்த 4 நிறங்களில் சாலை மைல்கல் இருப்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

இந்த 4 நிறங்களில் சாலை மைல்கல் இருப்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

இலவச பயணம் 

போட்டிகள் நடைபெறும் நாட்களில், 3 மணி நேரத்திற்கு முன்னதாக சேப்பாக்கம் செல்லும் பேருந்துகளில் ஐபிஎல் டிக்கெட்டை காண்பித்து பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL போட்டி: மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் - ஆனால் ஒரு கண்டிஷன்! | Ipl 2024 City Buses Free For Fans To Chepauk

அதேபோல் போட்டி முடிந்து 3 மணி நேரத்துக்கு, சேப்பாக்கத்திலிருந்து பிற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம். ஆனால், இந்த சலுகை குளிர்சாதன பேருந்துகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.