அவ்வளவு தொகை கொடுத்திருந்தாலும் CUP கிடைக்காது; இதுதான் காரணம்.. - ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி!

Kolkata Knight Riders Cricket AB de Villiers Sports IPL 2024
By Jiyath Dec 22, 2023 05:26 AM GMT
Report

கொல்கத்தா அணி அதிக தொகைக்கு வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்தாலும் கோப்பையை வெல்ல முடியாது என முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணி 

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

அவ்வளவு தொகை கொடுத்திருந்தாலும் CUP கிடைக்காது; இதுதான் காரணம்.. - ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி! | Ipl 2024 Ab De Villiers About Kkr Team

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை மிட்சல் ஸ்டார்க் பெற்றார். ஆனால் மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட வீரர்களை அதிக தொகைக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்திருந்தாலும், அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியாது என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

CUP ஜெயித்தவருக்கே இந்த நிலைமையா..? SRH அணி செய்த காரியம் - வேதனையில் Warner!

CUP ஜெயித்தவருக்கே இந்த நிலைமையா..? SRH அணி செய்த காரியம் - வேதனையில் Warner!

ஏபி டிவில்லியர்ஸ்

இது தொடர்பாக அவர் கூறுகையில் "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு யூனிட் பலமாக உள்ளது. பந்துவீச்சில் இருக்கும் பலம் அந்த அணியின் பேட்டிங்கில் இல்லை என்றே நான் கருதுகிறேன்.

அவ்வளவு தொகை கொடுத்திருந்தாலும் CUP கிடைக்காது; இதுதான் காரணம்.. - ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி! | Ipl 2024 Ab De Villiers About Kkr Team

கொல்கத்தா அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் திறமையானவர்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை. ரிங்கு சிங் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் இந்த பேட்டிங் ஆர்டரை வைத்து கொண்டு கொல்கத்தா அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியுமா என்றால் அது சந்தேகம் தான்.

பேட்டிங் ஆர்டர் மிக மோசமானது இல்லை என்றாலும், அவர்களால் நிச்சயம் டாப் 4 இடங்களுக்குள் வர முடியாது என்பதே எனது கருத்து. பேட்டிங் ஆர்டரே கொல்கத்தா அணியின் பலவீனமாக நான் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.