குஜராத் பிளே ஆப்புக்கு தகுதி; பெரிய சிக்கலில் சிஎஸ்கே - ஏன்?
பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் டைடன்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.
பிளே ஆப்
ஐபிஎல் 16ஆவது சீசன் 62ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் ஓபனர் ஷுப்மன் கில் 58 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 101 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார்.
குஜராத் அணிக்கு இதுதான் முதல் சதம். குஜராத் அணி 20 ஓவர்களில் 188/9 ரன்களை எடுத்தது. 154/9 ரன்களை மட்டும் சேர்த்து, சன் ரைசர்ஸ் அணியால் வெற்றிபெற முடியவில்லை.
சிஎஸ்கே?
இப்போட்டியில் வெற்றியைப் பெற்றதன் மூலம், குஜராத் டைடன்ஸ் அணி 13 போட்டிகளில் 18 புள்ளிகளை பெற்று, பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசிப் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக வென்றாலும் கூட, 17 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இதனால் பிளே ஆப்புக்கு முன்னேறலாம் ஆனால், தல் இரண்டு இடங்களில் ஒன்றை உறுதிசெய்ய இது போதுமானது கிடையாது.