ஐபோன் உற்பத்தி சரியும் அபாயம் - மல்லுக்கட்டும் நிறுவனங்கள்!
உலகின் பெரிய ஆலையில் ஐபோன் உற்பத்தி 30% சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐபோன் உற்பத்தி
சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய உற்பத்தி ஆலையான செங்செள-வில் அடுத்த மாதத்திற்கான ஐபோன் உற்பத்தி 30 சதவீதம் வரை குறையும் என தகவம் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில், இந்த சரிவை ஓரளவிற்கு ஈடுசெய்ய ஷென்சென் ஆலையில் பாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தியை அதிகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இங்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். உலகளவில் மின்சாதன பொருட்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இது மாதிரியான இடர்பாடான சூழல் ஏற்பட்டுள்ளது.
30% சரிவு?
இதனை கட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டு வருவதாக பாக்ஸ்கான் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இதர ஆலைகளுடன் சேர்ந்து இந்த உற்பத்தி சரிவை ஈடுசெய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால், உற்பத்தி சரிவு குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.