திருப்பதி: சிங்கத்துடன் செல்ஃபி எடுக்க முயன்ற நபர் - விபரீத ஆசையால் நேர்ந்த சோகம்!
செல்ஃபி எடுக்க கூண்டுக்குள் இறங்கிய நபரை சிங்கம் தாக்கி கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாக்கிய சிங்கம்
திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு ராஜஸ்தானை சேர்ந்த பிரகலாத் குஜ்ஜார் (34) என்பவர் நேற்று வந்தார். இவர் கையில் செல்போனுடன் அருகில் உள்ள மரத்தின் வழியாக சிங்கங்களை பராமரிக்கும் பகுதிக்குள இறங்கியுள்ளார்.
அப்போது கூண்டிலிருந்த ஆண் சிங்கம் அவரை பயந்து தாக்கத் தொடங்கியது. உடனே மரத்தின் மீது ஏறி தப்பிக்க முயன்றபோதும், பிரகலாத்தை மீண்டும் சிங்கம் பாய்ந்து தாக்கியது.
உயிரிழப்பு
உடனே அங்கு வந்த பூங்கா பாதுகாவலர்கள், சிங்கங்களை பராமரிப்பவரை உள்ளே அனுப்பினர். அந்த பராமரிப்பாளர் சிங்கத்தை அடக்கி கூண்டில் அடைப்பதற்குள் பிரகலாத உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பூங்கா அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.