இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளதா? ஒலிம்பிக் சங்கம் எடுத்த முக்கிய முடிவு

Olympic Academy India Paris 2024 Summer Olympics
By Karthikraja Nov 05, 2024 02:00 PM GMT
Report

2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது.

ஒலிம்பிக்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி ஆகும். ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடத்தப்பட்டது. 

paris olympics

இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபெற்றனர். ஒரு வெள்ளி 5 வெண்கல பதக்கம் வென்ற இந்தியா பதக்க பட்டியலில் 71வது இடத்தை பிடித்தது. 

ஒலிம்பிக்கில் இடம் பெற உள்ள கிரிக்கெட் - பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஒலிம்பிக்கில் இடம் பெற உள்ள கிரிக்கெட் - பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இந்தியாவில் ஒலிம்பிக்

அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடக்க உள்ளது.

india team in paris olympics

இந்த நிலையில் 2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அங்குள்ள வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அகமதாபாத்

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த ஏற்கனவே கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மெக்சிகோ, இந்தோனேசியா, போலந்து, எகிப்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் விண்ணப்பித்துள்ளன. இந்தியாவிற்கே அதிக வாய்ப்பு உள்ளது என IOC தலைவர் தாமஸ் பாக் தனது ஆதரவை அளித்துள்ளார். 

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு என ஏற்கனவே பிரதமர் மோடி பேசியிருந்தார். இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டால் குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.