தாய் வாங்கிய கடனுக்காக 17 வயது மகளுக்கு ஏற்பட்ட கொடூரம் -விசாரணையில் பகீர் தகவல்!

Sexual harassment Karnataka India
By Vidhya Senthil Jan 21, 2025 04:16 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

    தாய் வாங்கிய கடனுக்காக 17 வயது மகளுக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கர்நாடகா

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் பழங்குடியின பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த விஷால் தவாலி என்பவரிடம் மருத்துவ செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தாக தெரிகிறது.

தாய் வாங்கிய கடனுக்காக 17 வயது மகளுக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்

மேலும் வாங்கிய கடனை திரும்ப தர முடியாமல் அந்த பெண் கடும் அவதியடைந்து வந்துள்ளார். இந்த சூழலில் விஷாலும் அவரின் தாய் ரேணுகாவும் கடனாக வாங்கிய பணத்தைப் பலமுறை திரும்பக் கேட்டுள்ளனர்.ஆனால் அவரால் திரும்பச் செலுத்த முடியவில்லை.

குளிக்கும் போது வீடியோ கால் பண்ணு..பள்ளி மாணவியிடம் ஆசிரியர் செய்த கொடூரம் - பகீர் தகவல்!

குளிக்கும் போது வீடியோ கால் பண்ணு..பள்ளி மாணவியிடம் ஆசிரியர் செய்த கொடூரம் - பகீர் தகவல்!

 கொடூர சம்பவம்

இதனால் ஆத்திரம் அடைந்த விஷால் தவாலி கடந்த செப்டம்பர் மாதம் பெண்ணின் 17 வயது மகளைக் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து 17 வயது மகளை பாலியல் ரீதியாகத் தொல்லை அளித்துள்ளார்.

தாய் வாங்கிய கடனுக்காக 17 வயது மகளுக்கு ஏற்பட்ட கொடூரம் -விசாரணையில் பகீர் தகவல்! | Involving 17 Year Old Daughter Loan Taken Mother

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விஷால், அவரின் தாய் ரேணுகா மற்றும் மேலும் 8 பேர் மீது போக்சோ சட்டம், எஸ்சிஎஸ்டி ஆகிய சட்டங்களின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.