பகலில் நடந்த இரட்டை கொலை..ஆறாக ஓடிய ரத்தம் - மருமகனின் வெறிச்செயல்!
குடும்ப தகராற்றில் மாமனார், மாமியாரை மருமகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் வசித்து வருபவர்கள் விவசாயி பாஸ்கர்- செல்வராணி தம்பதியினர். இவர்களுக்கு ஜெனிபர் என்ற ஒரு மகள் உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மரிய குமார் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு ஜெனிபருக்கும் அவரது மகளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெனிபர் கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன் ஜெனிபர் வேறொரு நபரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.இதனால் மருமகன் மரியகுமார் ஆத்திரமடைந்து நேற்று பாஸ்கர்- செல்வராணி வீட்டிற்குச் சென்று தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.
வெட்டிக் கொலை
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மரியகுமார் மாமியார், மாமனாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அக்கம் பக்கத்தினர் பார்த்த போது பாஸ்கர்- செல்வராணி தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் சடலமாகச் சரிந்து கிடந்தனர்.
இதனையடுத்து பெருமாள் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் மரியகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.