மனைவி பெயரில் இந்த திட்டத்தில் முதலீடு; வரியை சேமிக்கலாம் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
வங்கியில் பணத்தை வைப்பு நிதி மூலம் சேமிப்பது குறித்த பல தகவல்களை தெரிந்துக்கொள்வோம்.
வைப்பு நிதி
நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் முதலீடு செய்யும் ஒன்றாக வைப்பு நிதி(fixed deposit) உள்ளது. வழக்கமான சேமிப்பு கணக்கைக் காட்டிலும் வருங்கால வைப்பு நிதியில் நமக்கு அதிக முதலீடு கிடைக்கும்.
இதில் குறிப்பாக மற்றொரு தகவல் என்னவென்றால், மனைவி இல்லத்தரசியாக இருந்தால், நீங்கள் அவர்கள் பெயரில் வைப்பு நிதி தொடங்கினால் உங்களால் வரியையும் சேமிக்க முடியும்.
டிடிஎஸ் பிடித்தம்
வருமான வரி சட்டப்படி, உங்களுக்கு வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி ரூ.80,000க்கு மேல் இருந்தால், டிடிஎஸ் (Tax Deducted at Source) பிடித்தம் செய்யப்படும். ஆனால், மனைவி இல்லத்தரசி இருந்து, அவர்களிடம் வேறு வருமானம் இல்லை என்றால், அந்த வைப்பு நிதியில் இருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது.
இந்த சலுகையைப் பெற ஒருவர் தனது மனைவியின் பெயரில் வைப்பு நிதியைத் தொடங்கி, படிவம் 15G-ஐ சமர்ப்பிக்க வேண்டும். கணவன் மனைவி இணைந்து ஜாயிண்ட் கணக்காகக் கூட வைப்பு நிதி கணக்கைத் தொடங்கலாம்.
அதில் மனைவி தான் முதன்மை அக்கவுண்ட் ஹோல்டராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 60 வயதுக்கு குறைவானவர்களுக்கு மட்டுமே 15G பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.