இனி பயணிகள் பணம் இல்லாமல் டிக்கெட் பெறலாம் - பேருந்தில் புதிய டெக்னாலஜி!

Udhayanidhi Stalin Chennai
By Swetha Feb 29, 2024 06:02 AM GMT
Report

பேருந்துகளில் யு.பி.ஐ மூலம் டிக்கெட் வழங்கும் வசதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

புதிய டெக்னாலஜி

சென்னை மாநகர பேருந்துகளில் இ-டிக்கெட் வழங்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது.

upi technology

இனி பேருந்து நடத்துநர்கள் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலமாக பயணிகளிடம் கார்ட் மற்றும் யு.பி.ஐ மூலம் பணம் பெற்றுக் கொண்டு பயணச் சீட்டு வழங்குவார்கள்.

இந்த கருவியில் தொடுதிரை வசதி இருப்பதால் பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு பெற்றுகொள்ளலாம்.

சென்னை மாநகரப் பேருந்து பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..! இதோ

சென்னை மாநகரப் பேருந்து பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..! இதோ

சேவை தொடக்கம்

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் 50 புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தனர்.

இனி பயணிகள் பணம் இல்லாமல் டிக்கெட் பெறலாம் - பேருந்தில் புதிய டெக்னாலஜி! | Introduction Of Ticketing Facility Through Upi

பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கும் வேகம் மற்றும் எளிதான பயன்பாட்டுக்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகளில் பயணிகள் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லாமல் நவீன முறையில் இ-டிக்கெட்டை பெற்றுகொள்ளலாம். 

இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு நடைவாரியாகவும் மற்றும் நிலைவாரியாகவும் பயணிகள் மற்றும் வசூல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.