காதலனுடன் காரில் நெருக்கம்; ரகசிய வீடியோ - பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை!
காதலனுடன் இருந்த வீடியோவைக் காட்டி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதலனுடன் நெருக்கம்
டெல்லி, பிரசாந்த் விகாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி(20) ஒருவர் தனது காதலனுடன் காரில் ஒன்றாக இருந்துள்ளார். இதனை நபர் ஒருவர் கவனித்து ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அதன்பின் கார் புறப்பட்டுச் சென்றுள்ளது. அந்த நபரும் பிந்தொடர்ந்து சென்றுள்ளார்.
அதனையடுத்து மாணவியின் வீட்டில் அவரது காதலன் இறக்கி விட்டுச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவியை பின்தொடர்ந்து வந்த நபர் காதலருடன் இருந்த வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
சமூக வலைதளங்களில் அதனை வெளியிடப்போவதாகக் கூறி மாணவியைத் தாக்கி, பலையல் வன்கொடுமை செய்து தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காதலனிடம் தெரிவித்துள்ளார்.
அவர், போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்ததில் ரவி சோலாங்கி(25) என்பது தெரிய வந்தது. உடனே அவரை கைது செய்துள்ளனர்.