மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடித் திருவிழா..மக்களை கவர்ந்த கார்ட்டூன் பட்டங்கள்!
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரைப் பகுதியில் சர்வதேச காற்றாடித் திருவிழா இன்று நடைபெற்றது.
மாமல்லபுரம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை, திருவிடந்தை கடற்கரையில் சுற்றுலாத் துறை சார்பில் 3வது முறையாக சர்வதேச காற்றாடித் திருவிழாதொடங்கி உள்ளது .
இந்த பட்டம் விடும் திருவிழா ஆகஸ்ட் 15 தொடங்கி ஆகஸ்ட் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற விழாவில் ,தாய்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, மலேசியா நாடுகளில் இருந்து ராட்சத காற்றாடியை பறக்கவிட வருகை தந்துள்ளனர்.
காற்றாடித் திருவிழா
இந்த காற்றாடித் திருவிழாவில் எண்ணற்ற வண்ணங்களில் பல்வேறு வகையான பட்டங்கள் கார்ட்டூன் கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டு பறக்க விடப்பட்டது.

கடந்த ஆண்டு, நடைபெற்ற காற்றாடித் விடும் திருவிழாவில் சுமார் 150 காத்தாடிகள் பறக்கவிட்ட நிலையில், இந்த ஆண்டு 300 காற்றாடிகளை பறக்கவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் 25,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காற்றாடி விடும் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! IBC Tamil
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: சுக்கிர புத்திரர்களான ரிஷப ராசியினருக்கு எப்படி அமையப்போகிறது? Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan