மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டி

Chennai 44th Chess Olympiad
By Thahir Jul 29, 2022 03:05 AM GMT
Report

செஸ் ஒலிம்பியாட் தொடர் நேற்று தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் 3 மணி முதல் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன .

செஸ் ஒலிம்பியாட் போட்டி 

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது.

44th Chess Olympiad

இந்த தொடரில் 186 நாடுகளை சேர்ந்த வீரர், வீரர்கள் பங்கேற்கின்றனர். பாகிஸ்தான் திடீரென விலகியுள்ளது. செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யா, சீனா இம்முறை பங்கேற்கவில்லை.

அதேவேளையில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், மகளிர் பிரிவில் 3 அணிகளும் என மொத்தம் 6 அணிகளில் 30 பேர் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பியாட் போட்டி 11 சுற்றுகளை கொண்ட சுவிஸ் லீக் வடிவத்தில் நடத்தப்படுகிறது. அதில், முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு 

பொதுபிரிவினருக்கான முதல் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. அதேபோன்று பெண்களுக்கான முதல் போட்டியில் அமெரிக்கா விளையாட உள்ளது.

Chess Olympiad Chennai

போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் சுழற்சி முறையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சதுரங்க போட்டியில் பங்கேற்க வருகை தரும் நபர்கள் யாராக இருந்தாலும் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.