சர்வதேச தேநீர் தினம் - இந்தியாவும் - டீ கதையும் தெரியுமா..?
இன்று சர்வதேச தேநீர் தினம் - டீ டே.
டீ
அடிக்குற வெயிலுக்கு நேராக கடைக்கு சென்று "அண்ணா சில்லு'னு ஒரு ஜூஸ் கொடுக்குங்க கேக்குறவங்க மத்தியில "சூட ஒரு டீ போடு'னா என சொல்றவங்களுக்கும் இருக்க தான் செய்யுறங்க.
அந்த அளவிற்கு டீ நமது மக்களின் வாழ்வில் கலந்து போன விஷயமாக மாறிவிட்டது. காலை எழுந்தது முதல் வேலையாக டீ குடிப்பதில் துவங்கி, நைட் பைக் எடுத்து 1 கிலோமீட்டர் போய் டீ குடிப்பவர்கள் வரை பல டீ பிரியவர்கள் உள்ளார்கள்.
நாம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் டீ பெரிய வரவேற்பு பெற்ற விஷயம் தான். ஆசிய மக்கள் குறிப்பாக ஒரு நாளை டீ இல்லாமல் கடந்து செல்ல மாட்டார்கள். அப்படி டீ மீது மக்களின் அபிமானம் காரணமாகவும், உலகில் தேயிலை தொழிலின் வளர்ச்சியை பார்த்தும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மே 21ம் தேதி சர்வதேச தேநீர் தினமாக அறிவித்தது.
இன்று அத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. க்ரீன் டீ, ப்ளாக் டீ, ஹெர்பல் டீ, ஒயிட் டீ என பல வகைகள் இருக்கின்றது.
தேநீர் தினம்
இந்த தேநீர் சர்வதேச தினம் கொண்டாடப்படுவதற்கான பல முக்கியத்துவம் உள்ளது. பண பேதமின்றி எடுத்துக்கொள்ளப்படும் பானமாக தேயிலையின் உற்பத்தி ஊக்குவிக்கும் நோக்கிலும், வறுமை மற்றும் பசிக்கு எதிரான போராட்டத்தின் எதிராகவே இத்தினம் கொண்டுவரப்பட்டது.
நீண்ட வரலாறு என்பதை தாண்டி மக்களின் கலாச்சாரத்திலும் ஒரு நாட்டின் பொருளாதாரத்திலும் பெரிய இடத்தை தேயிலை கொண்டுள்ளது. ஆசியா நாடுகளில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, வியட்நாம், நேபாளம் போன்ற நாடுகள் அதிகளவில் தேயிலை உற்பத்தி செய்கின்றன.
இந்தியாவும் தேயிலையும்
இந்தியாவின் பர்மா, மியான்மர் மற்றும் அஸ்ஸாம் மலைப்பகுதிகளில் 1821'இல் இந்த தேயிலை செடிகள் கண்டறியப்பட்டதாக வரலாற்று தகவல் உள்ளது. முதலில் ஆங்கிலேயர்கள் தான் இந்தியாவில் தேயிலை உற்பத்தியைத் துவங்கி வைத்தனர்.
1836 ஆம் ஆண்டில் இந்தியாவில் இந்த உற்பத்தி துவங்குவதற்கு முன்பாகவே, சீனாவில் பெரும் ஆதிக்கத்தை இந்த தொழிலில் காட்டியுள்ளது.
பரவலாக இந்தியாவின் பல மலைப்பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் காணப்படும் சூழலில், இந்தியாவில் கிடைக்கும் மலிவான அனைத்து தரப்பு மக்களும் விரும்பி எடுத்து கொள்ளும் பானமாக டீ உள்ளது குறிப்பிடத்தக்கது.