கடலுக்குள் அப்படியே மூழ்கும் விமான நிலையம் - அரசு என்ன செய்யப்போகிறது?
கன்சாய் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக மூழ்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்சாய் விமான நிலையம்
ஜப்பான் கன்சாய் விமான நிலையத்தின் ஓடுபாதை கடல் பரப்பின் மேல் மிதப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பசிபிக் கடலில், ஓசாகா நகரத்திற்கு அருகில் கடலுக்குள் செயற்கையாக கட்டப்பட்ட தீவில் உள்ளது.
கடலின் மேற்பரப்பில் மிதப்பதற்காக களிமண்ணை பயன்படுத்தி அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. இந்த கட்டமைப்பு நீண்ட காலம் தாக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மெதுவாக மூழ்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூழ்கும் அபாயம்
செயற்கை தீவின் மேற்பரப்பு 13 அடியும், விமான நிலையம் 45 அடியும் மூழ்கியுள்ளன. இந்நிலையில் ஆயிரத்து 280 கோடி ரூபாய் செலவில், விமான நிலையத்தின் கட்டமைப்பை மேம்படுத்தும் பணி நடைபெறவுள்ளது.
அந்த வகையில், கடலின் கரைப்பகுதிகளை பலப்படுத்த சுற்றுச்சுவர் அமைத்தல், செங்குத்து மணல் வடிகால்கள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. அந்த வகையில், கடலின் கரைப்பகுதிகளை பலப்படுத்த சுற்றுச்சுவர் அமைத்தல், செங்குத்து மணல் வடிகால்கள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
கடல் மட்டம் உயர்வு, களிமண் அஸ்திவாரத்தால் பெரும் எடையை தாங்க முடியாத நிலை போன்றவை மூழ்க காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.