4 வயது இரட்டைக் குழந்தைகளுக்கு திருமணம் - பெற்றோர் சம்மதத்தின் பின்னணி!
4 வயது இரட்டைக் குழந்தைகளுக்கு திருமணம் நடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இரட்டையர்களுக்கு திருமணம்
தாய்லாந்து, பிரச்சாயா ரிசார்ட்டில் வசிப்பவர்கள், தட்சனாபோர்ன் சோர்ன்சாய் மற்றும் அவரது சகோதரி தட்சதோர்ன். இருவரும் 4 வயதே ஆன இரட்டையர்கள். இவர்களுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வீடியோவில், சகோதரி தனது சகோதரனுக்கு கன்னத்தில் முத்தமிடுகிறார். பின்னர், அவர்கள் திருமண சடங்குகளைச் செய்கிறார்கள். பின் புத்த துறவிகள் தம்பதியினரை ஆசீர்வதிக்கிறார்கள். திருமண நிகழ்வுக்குப் பிறகு இரட்டையர்களின் நெற்றியில் குறியிடப்பட்டது.
வைரல் வீடியோ
இந்த திருமணத்திற்கு வரதட்சணையாகக் குடும்பத்தினர் நான்கு மில்லியன் பாட் மற்றும் தங்கத்தை வழங்கியுள்ளனர். வைரலாகி வரும் அந்த வீடியோ, பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. அங்கு எதிர்பாலின இரட்டையர்கள், முன்ஜென்மத்தில் காதலர்களாக இருந்ததாகவும், அவர்கள் மீண்டும் இரட்டையர்களாகப் பிறப்பதாகவும் நம்பப்படுகிறது.
Four-year-old twins in Thailand were symbolically married in a lavish traditional ceremony to bring good luck and ward off misfortune, in accordance with long-held Thai Buddhists’ beliefs. pic.twitter.com/nR11nLLliw
— China Daily Hong Kong (@CDHKedition) July 4, 2025
அவர்களுடைய வாழ்க்கையில் நோய் அல்லது விபத்தைத் தடுக்கும் வகையில் இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இரட்டையர்களின் திருமணம் அவர்களுடைய 10 வயதுக்குள்ளே செய்யப்பட வேண்டும் எனக் கூறுகின்றனர்.
இந்த நடைமுறை, குடும்பங்களில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.