ஆருத்ரா நிர்வாக இயக்குநரை கைது செய்ய இடைக்கால தடை..!
Tamil nadu
Tamil Nadu Police
By Thahir
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் ராஜசேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோசடி வழக்கில் இடைக்கால தடை
பொதுமக்களிடம் இருந்து ரூ.1,168 கோடி முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மோசடி வழக்கில் ராஜசேகர், கமல், ஜெய் கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில், நிறுவனத்தில் வைப்பு நிதி செலுத்தியவர்களுக்கு பணம் திருப்பி தருவதை அரசு உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது. மனுதாரர்கள் நீதிமன்ற அனுமதியில்லாமல் நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.