சாதி மறுப்பு திருமணம் - செய்து வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடல்!

Tamil nadu Tirunelveli
By Swetha Jun 15, 2024 03:12 AM GMT
Report

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மதன் குமார் (28). இவருக்கும்,பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (23) என்ற பெண்ணும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது.

சாதி மறுப்பு திருமணம் - செய்து வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடல்! | Inter Cast Marriage Attack On Communist Office

இதனால் இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் திருமணம் திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சாதி மறுப்பு திருமணம் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தலைமையில் நடந்துள்ளது.

7 வருஷ காதல்; எதிர்த்த பெற்றோர், கர்ப்பமான காதலி - சாதி மறுப்பு திருமணம்!

7 வருஷ காதல்; எதிர்த்த பெற்றோர், கர்ப்பமான காதலி - சாதி மறுப்பு திருமணம்!

சாதி மறுப்பு திருமணம்

இதை தொடர்ந்து இந்த சம்பவத்தை அறிந்த பெண் வீட்டார், அதிரடியாக அலுவலகத்துக்குள் புகுந்து புகுந்து கண்ணாடிகள் மற்றும் நாற்காலிகளை உடைத்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்ட சாதி சங்கத்தை சிலர் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாதி மறுப்பு திருமணம் - செய்து வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடல்! | Inter Cast Marriage Attack On Communist Office

இதற்கு காரணம் என்னவென்றால் பட்டியலின இளைஞரும், வேறு சமூக பெண்ணும் காதலிப்பதாக மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் தஞ்சமடைந்தது குறிப்பிடதக்கது. இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.