காஃபி குடிப்போருக்கு கண் பார்வை குறைவு? ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இன்ஸ்டன்ட் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டன்ட் காபி
சீனாவில் உள்ள ஹூபே யூனிவர்சிட்டி ஆஃப் மெடிசன் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இன்ஸ்டன்ட் காபி குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்காக ஆராய்ச்சியாளர்கள் UK பயோபேங்க் தரவுகளை பயன்படுத்தினர்.
அதில் மக்கள் மொத்தமாக எவ்வளவு காபி குடித்தனர் மற்றும் அவர்கள் குடித்தது இன்ஸ்டன்ட் காபியா, அரைத்த கொட்டைகளில் தயாரித்த காபியா அல்லது காஃபைன் நீக்கப்பட்ட காபியா என்பது போன்ற விபரங்கள் பெறப்பட்டுள்ளது.
பார்வை திறன்
மேலும் அதில் AMD கண்டுபிடிப்பது சம்பந்தமான ஆரோக்கியம் சார்ந்த தரவுகளும் இருந்துள்ளது. AMD என்பது தெளிவான மற்றும் கூர்மையான பார்வை திறனுக்கு பொறுப்பான கருவிழியின் மத்திய பகுதியை மெது மெதுவாக பாதிக்கும் ஒரு நாள்பட்ட கண் நோய்.
இன்ஸ்டன்ட் காபியில் காணப்படும் சேர்க்கை பொருட்கள் அல்லது அக்ரிலமைடு, ஆக்சிடைஸ் செய்யப்பட்ட லிப்பிட்கள் போன்ற கெமிக்கல்கள் இந்த உலர்ந்த AMD பிரச்சனையை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் ஏற்படுவதற்கான அதிக அபாயத்தில் இருப்பவர்கள் இன்ஸ்டன்ட் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். இன்ஸ்டன்ட் காபி குடிப்பதால் வயது தொடர்பான கண் சிதைவு ஏற்பட்டு, கண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.