இளநரை இருக்கா? இந்த ஒரே இலை போதும் - டை-க்கு குட்பை சொல்லுங்க

Life Style
By Sumathi Jun 21, 2025 02:30 PM GMT
Report

நரை முடி பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இளநரை

வாழ்க்கை முறை மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவுத் தேர்வுகள் உட்பட பல காரணங்களாக நரைமுடி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

young age grey hair

எனவே, கூந்தல் வெள்ளையாக மாறினால், அதனை மீண்டும் கருப்பாக காட்ட ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். ஆனால் செயற்கை நிறம் நீண்ட கால தீர்வை தராது. இதற்கு மாற்றான சிறந்த வழிகள் உள்ளன.

இரவில் தூக்கம் வரவில்லையா? இதை மட்டும் செய்து பாருங்க

இரவில் தூக்கம் வரவில்லையா? இதை மட்டும் செய்து பாருங்க

கற்பூரவல்லி இலை

அது என்னவென்றால், சுமார் 10 அல்லது 15 ஃப்ரெஷ் கற்பூரவல்லி இலைகளை இரும்புப் பாத்திரத்தில் எடுத்து, கைகளால் பிசைந்து சாறு முழுவதும் வெளியேறச் செய்ய வேண்டும். பிறகு இலைகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

hair pack

பின், 2 ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை மிக்ஸியில் லேசாக அரைக்க வேண்டும். இதனை ஊற வைத்திருக்கும் கற்பூரவல்லி இலைகளுடன் சேர்க்கலாம். தொடர்ந்து சாறை மட்டும் வடிகட்டி எடுத்து, சிறிதளவு அவுரிப் பொடியுடன் கலக்க வேண்டும்.

பின் 15 நிமிடங்கள் காற்றுப் போகாமல் மூடி வைக்க வேண்டும். கடைசியாக, இந்த ஹேர்பேக்கை தலையில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நரை முடிகள் கருப்பாக மாறும்.