தினசரி தயிர் சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படுமா? தெரிந்து கொள்ளுங்கள்
கோடை காலத்தில் நாம் பலரும் தினசரி உணவில் கட்டாயமாக தயிரை சேர்த்துக் கொள்கிறோம். அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தயிர் சாப்பிடலாமா?
கோடை காலத்தில் எளிதில் ஜீரணம் ஆகும் என்பதால் நாம் தினசரி உணவில் தயிரை சேர்த்துக் கொள்கிறோம். இதில் பலருக்கும் தயிர் பிடித்த உணவு என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
குறிப்பாக தயிரில் கால்சியம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆகியவை இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மேலும், தினமும் நாம் தயிரை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படி பல நன்மைகள் தயிரில் இருக்கும் நிலையில் சில தீமைகளும் உள்ளன.
தயிரை எடுத்துக் கொள்பவர்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருந்தால் வயிற்றுப்போக்கு மற்றும் பிற வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இதில் அதிக அளவு கால்சியம் இருப்பதால் இரும்பு மற்றும் துத்தநாகம் உறிஞ்சப்படுவதை சற்று குறைக்கலாம். எனவே மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
தயிரில் பல நன்மைகள் இருப்பினும் மிதமான அளவு எடுத்துக் கொள்வதே உடலுக்கும் வயிற்றுக்கும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.