இன்ஸ்டா யூஸ் பண்ணுறீங்களா? இனி இதெல்லாம் கட்டாயம் - மெட்டா அதிரடி
16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ் அப், த்ரெட் உள்ளிட்ட செயலிகள் மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு காரணமாக இன்ஸ்டா சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, 16 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் இன்ஸ்டாகிராமில் வீடியோவை நேரலை செய்ய பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கான பாதுகாப்புகளை Facebook மற்றும் Messenger-க்கும் விரிவுபடுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
மேலும் இதில் டீன் ஏஜ் கணக்குகளை அந்நியர்களிடமிருந்து தனிப்பட்ட செய்திகளைத் தடுப்பது, சண்டை வீடியோக்கள், வரம்பு மீறியவற்றை பார்த்தால் 60 நிமிடங்களுக்குப் பிறகு செயலியை விட்டு வெளியேற நோட்டிஃபிகேஷன் அனுப்பும் அம்சங்களும் அடங்கும்.
இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை பதின்பருவத்தினரின் கணக்குகள் ஸ்லீப் மோடுக்கு சென்றுவிடும். இந்த புதிய அம்சங்கள் முதலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு அறிமுகமாகியுள்ளது.
பின், அடுத்த மாதங்களில் உலகளாவிய பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து, பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகளிலும் இந்த அம்சம் விரைவில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.