புகைப்படங்களை நீக்கிய மஞ்சிமா மோகன் - இதுதான் காரணமா!
தனது இன்ஸ்டாலில் புகைப்படங்களை நீக்கியது குறித்து நடிகை மஞ்சிமா மோகன் விளக்கமளித்துள்ளார்.
மஞ்சிமா மோகன்
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். 1997 முதல் 2001 வரை குழந்தை நட்சத்திரமாக எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு நிவின் பாலியுடன் நடித்த ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர்,

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நிறைய படங்களில் நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர் தேவராட்டம் படத்தில் கெளதம் கார்த்தியுடன் நடித்ததில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. தொடர்ந்து அது காதலாக மாறியது. மேலும், இருவரும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து தங்களது காதலை உறுதிப்படுத்தினர்.
இன்ஸ்டா - விளக்கம்
இந்நிலையில், சமீபத்தில் மஞ்சிமா இன்ஸ்டாவில் தன்னுடைய பழைய புகைப்படங்களை எல்லாம் நீக்கியுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து விளக்கமும் அளித்துள்ளார். அதில், இன்ஸ்டாகிராம் தளம் என்பது மக்களுடன் இணைந்திருப்பதற்கு ஏற்ற எளிய அழகான தளம் என்பதை அறிவேன்.

அது எந்த அளவிற்கு அழகானது என்றோ ஆபத்தானது என்றோ நான் கவலைப்படவில்லை. அதனால், என்னுடைய பழைய புகைப்படங்களை நான் இன்ஸ்டாகிராமில் இருந்து தவிர்க்கிறேன். நான் மீண்டும் எல்லாவற்றையும் தொடங்குவேன்.
நான் முன்பெல்லாம் என் மீதே அதிகம் நம்பிக்கை இல்லாமல் இருப்பேன். ஆனால், முன்பு எப்போதும் இல்லாததை விட நான் அதிக நம்பிக்கயுடன் இருக்கிறேன். அதை நான் இன்னும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil