கல்யாணத்திற்கு ரெடியான கெளதம் - மஞ்சிமா மோகன்.. எப்போ தெரியுமா!

Gautham Karthik Manjima Mohan Tamil Cinema Marriage
By Sumathi Nov 12, 2022 09:30 PM GMT
Report

கெளதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகனுடன் காதலில் இருப்பதை உறுதி செய்துள்ளார்.

காதல் 

கெளதம் கார்த்திக் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கல்யாணத்திற்கு ரெடியான கெளதம் - மஞ்சிமா மோகன்.. எப்போ தெரியுமா! | Gautham Karthik And Manjima Wedding Date Announced

2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் இணைந்து பணியாற்றிய கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான வண்னம் இருந்தது.

திருமணம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மஞ்சிமா மோகனின் பிறந்தநாளில், தனது வாழ்த்துகள் மூலம் அவருடனான காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பதிவின் மூலம் அவருடனான காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.

கல்யாணத்திற்கு ரெடியான கெளதம் - மஞ்சிமா மோகன்.. எப்போ தெரியுமா! | Gautham Karthik And Manjima Wedding Date Announced

அதில், 'நட்பாக துங்கிய தங்களுக்கிடையேயான உறவு அதைவிட வலிமையான பிணைப்பை ஏற்படுத்தியது. எங்களுக்கிடையே இருப்பதை காதல் என்று மட்டும் பெயரிட முடியாது. ஒவ்வொரு நாளும் உங்கள் அன்பை சம்பாதித்து கடைசி வரை இந்த பந்தத்தை வளர்ப்பேன்' என தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து, இவர்களது திருமணம் இந்த மாதம் 28ஆம் தேதி பெற்றோரின் சம்மதத்தோடு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக ரெடியாகி வருகின்றன.