பிரபல நடிகையுடன் காதலை உறுதிப்படுத்திய கெளதம் கார்த்திக் - ஃபோட்டோஸ் வைரல்!
கெளதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகனுடன் காதலில் இருப்பதை உறுதி செய்துள்ளார்.
கெளதம் - மஞ்சிமா
கெளதம் கார்த்திக் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இவர், என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் இணைந்து பணியாற்றிய
கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான வண்னம் இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மஞ்சிமா மோகனின் பிறந்தநாளில், தனது வாழ்த்துகள் மூலம் அவருடனான காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தினார்.
காதல் உறுதி
கெளதம் கார்த்திக். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பதிவின் மூலம் அவருடனான காதலை உறுதிப்படுத்தியுள்ளார். அதில், 'நட்பாக துங்கிய தங்களுக்கிடையேயான உறவு அதைவிட வலிமையான பிணைப்பை ஏற்படுத்தியது.
எங்களுக்கிடையே இருப்பதை காதல் என்று மட்டும் பெயரிட முடியாது. ஒவ்வொரு நாளும் உங்கள் அன்பை சம்பாதித்து கடைசி வரை இந்த பந்தத்தை வளர்ப்பேன்' என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், காதலுக்கு ஓகே சொன்ன பெற்றோர் தற்போது திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்களாம்.