எப்போ கல்யாணம்... ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கெளதம் கார்த்திக்!

Gautham Karthik Manjima Mohan Gossip Today Marriage
1 வாரம் முன்

கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கெளதம் கார்த்திக்

கெளதம் கார்த்திக் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இவர், என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

எப்போ கல்யாணம்... ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கெளதம் கார்த்திக்! | Gautham Karthik And Manjima Mohan Get Married Soon

2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் இணைந்து பணியாற்றிய கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 மஞ்சிமா மோகன்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மஞ்சிமா மோகனின் பிறந்தநாளில், தனது வாழ்த்துகள் மூலம் அவருடனான காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தினார் கெளதம் கார்த்திக். இருவரும் இன்னும் தங்கள் காதலை வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும்,

எப்போ கல்யாணம்... ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கெளதம் கார்த்திக்! | Gautham Karthik And Manjima Mohan Get Married Soon

கெளதம் கார்த்திக்கிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் கார்த்திக் தற்போது சிம்புவின் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டகிராம் உரையாடலின் போது, திருமணம் குறித்த கேள்விக்கு, ’விரைவில் என நம்புகிறேன்’ என்று பதிலளித்துள்ளார் கெளதம் கார்த்திக்.

விரைவில் திருமணம்.. 

நீண்ட நாட்களாக கெளதம் மற்றும் மஞ்சிமா மோகன் காதலித்து வருவதாக கிசு கிசுக்கப்பட்டது. தற்போது, இருவரும் தங்கள் காதலைப் பற்றி இரு குடும்பத்தினரிடமும் தெரிவித்து விட்டார்களாம். காதலுக்கு ஓகே சொன்ன பெற்றோர் தற்போது திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்களாம். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.