ஓடிடியில் வெளியாகும் நரகாசூரன் திரைப்படம்!

ott narakasuran
By Irumporai Jul 18, 2021 11:13 AM GMT
Report

துருவங்கள் 16 படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் நரகாசூரன்.

அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

பணப்பிரச்சினை காரணமாக நீண்ட நாட்களாக இந்தப் படம் வெளியாகாமல் இருந்தது. இந்தநிலையில் படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து கெளதம் மேனன் விலகிய நிலையில் படத்தின் வெளியீடு குறித்த தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நரகாசுரன் ஓடிடி வெளியாவது உறுதியாக உள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 13ந் தேதி நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது