வட இந்தியர்கள் பெங்களூரை விட்டு கிளம்பினால்..வெடித்த சர்ச்சை - பல்டி அடித்த பிரபலம்!
வட இந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இன்ஸ்டா பிரபலத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
வட இந்தியர்கள் சர்ச்சை
இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சர் சுஜந்த் சர்மா. இவர், தொடர்ந்து ரீல்ஸ்களைப் பதிவேற்றி வருகிறார். அந்த வரிசையில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில்,
"நீங்கள் எல்லோரும் ’you northies go back’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். நாங்கள் அனைவரும் பெங்களூருவை உண்மையிலேயேவிட்டு வெளியேறினால், உங்கள் நகரம் வெறிச்சோடி போகும். முதலில், உங்கள் PGகள் காலியாகிவிடும்.
நீங்கள் இப்போது சம்பாதிக்கும் பணம் கிடைக்காது, கோரமங்கலாவில் உள்ள அனைத்து கிளப்புகளும் காலியாகிவிடும். இந்த கிளப்களில் பஞ்சாபி இசைக்கு நடனமாடுவதை நீங்கள் பார்க்கும் அழகான பெண்கள் எல்லாம் இனி இருக்க மாட்டார்கள்.
பல்டி அடித்த பிரபலம்
நீங்கள் பேசுவதற்குமுன் நினைத்துப் பாருங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறினால், பெங்களூரு தன்னைச் சுற்றியுள்ள அனைத்து அழகையும் இழக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவுக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடிகரும் ராப்பருமான சந்தன் ஷெட்டி, நடிகைகள் சைத்ரா ஆச்சார், அனுபமா கவுடா மற்றும் பிக் பாஸ் நட்சத்திரங்கள் ரூபேஷ் ராஜண்ணா மற்றும் தன்ராஜ் போன்றவர்கள் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தான் பெங்களூரூவை விரும்புவதாகவும் அந்த வீடியோ நகைச்சுவைக்காக மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் கூறி ரீல்ச் ஒன்றை சுஜந்த் வெளியிட்டுள்ளார்.
மேலும், தன்னம்பிக்கை வெறுப்பை பரப்புவதற்காக என்னுடைய ரீலை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.