நிர்வாண வீடியோ..டார்ச்சர் கொடுத்த இன்ஸ்டாகிராம் நண்பர் -கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை இன்ஸ்டாகிராம் வெளியிடுவேன் என ஆண் நண்பர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம்
சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மும்பையில் படித்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் வளசரவாக்கத்தில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்து தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் அறிமுகமாகியுள்ளார். இந்த பழக்கம் நட்பாக மாறி ஒருகட்டத்தில் எல்லை மீறியுள்ளது. அந்த இளைஞர் இளம் பெண்ணை அடிக்கடி நிர்வாணமாக வீடியோ காலில் வருமாறு கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால், தன்னை காயப்படுத்திக் கொள்வேன் என மிரட்டியுள்ளார்.இதனால் அந்த இளம்பெண் இரண்டு முறை நிர்வாணமாக வீடியோ காலில் பேசியதாகத் தெரிகிறது.
நிர்வாண வீடியோ
இந்த வீடியோவை ரெக்கார்ட் செய்து வைத்துக்கொண்டு இளம் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.இல்லையென்றால் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை இளைஞரிடம் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து அந்த வீடியோவை வைத்துக் கொண்டு மிரட்டியால் இளம்பெண் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.