இன்ஸ்டா புகழ் ஆசிரியை கொடூரக் கொலை; அக்கா எனக் கூறி ஸ்கெட்ச் - பகீர் பின்னணி!
இன்ஸ்டாகிராம் மூலம் புகழடைந்த ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியை கொலை
கர்நாடகா, மாணிக்யனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் லோகேஷ்(35). இவரது மனைவி தீபிகா. இவர்களு க்கு ஒரு மகள் உள்ளார். தீபிகா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார்.
இதற்கிடையில், இன்ஸ்டாவில் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானார். இந்நிலையில், காலை, பள்ளிக்குச் சென்றவர் திரும்பி வரவில்லை என அதிர்ச்சியடைந்த கணவர் போலீஸில் புகாரளித்துள்ளார்.
தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸாருக்கு மேலுகோட் யோக நரசிம்ம சுவாமி கோவிலின் மலை அடிவாரத்தில் சாக்கு மூட்டையில் வைத்து பாதி புதைக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடம் விரைந்து சென்று பார்த்ததில், அது காணாமல் போன தீபிகா என்பது தெரியவந்தது.
சிக்கிய இளைஞர்
இதற்கிடையில் மலை அடிவாரத்தில் தீபிகாவும், ஒரு இளைஞரும் சண்டை போடுவதை, கோவிலுக்கு வந்த சிலர் வீடியோ எடுத்திருந்தனர். அதனை போலீஸாரிடம் காட்டியதில், நிதிஷ்கௌடா என்பது தெரியவந்தது. தீபிகாவும், நிதிஷும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் அக்கா, தம்பி போன்று பழகி வந்துள்ளனர். ஆனால், இதனை குடும்பத்தினர் எதிர்த்து சண்டையிட்டதால் நிதிஷுடன் பேசுவதை தீபிகா தவிர்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நிதீஷ் அவரை கொலை செய்ய திட்டமிட்டு பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அன்று பிறந்தநாள் என்பதால் நிதிஷுக்கு சட்டை எடுத்துக் கொண்டு, அவரை சந்திக்க, யோக நரசிம்ம சுவாமி கோவில், மலை அடிவாரத்திற்கு தீபிகா சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தீபிகா கழுத்தை நெரித்து கொலை செய்து சாக்கு மூட்டையில் உடலை திணித்து ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில், புதைத்துவிட்டு தப்பி உள்ளார். தற்போது அவரை போலீஸார் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர்.