பெண் ஆய்வாளாருடன் உறவு.. புகைப்படம் பகிர்ந்த டிஎஸ்பிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
வாட்ஸ் ஆப் குரூப்பில் ஆபாச படங்களை வெளியிட்ட டிஎஸ்பியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
சர்ச்சை புகைப்படம்
திருச்சி சரக சார்பாக காவலர்களுக்கு என்று தனி வாட்ஸ் ஆப் குரூப் செயல்பட்டு வருகிறது. இதில் காவல்துறை தொடர்பான செய்திகள் படங்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த குழுவில் பெண் காவல் ஆய்வாளர்
ஒருவருடன் ஆபாசமாக இருந்த புகைப்படத்தை ஜீயபுரம் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த வாசுதேவன் பகிர்ந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் காவலர்கள் பலரும் டிஜிபிக்கு புகார்களை அனுப்பினர்.
டிஜிபி அதிரடி
இதனையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது குறித்த விசாரணை அறிக்கையை டிஜிபிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் புகாருக்கு உள்ளான பெண் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
டிஎஸ்பி வாசுதேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
பெண் இன்ஸ்பெக்டருடன் தனிமையில் இருந்த புகைப்படத்தை காவலர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குழுவுக்கே அனுப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.