அழியாத மை.. புரியாத புதிர் - 8 ஆண்டுகள் ஓட்டு போட முடியாமல் தவிக்கும் மூதாட்டி!

Kerala India Election Lok Sabha Election 2024
By Jiyath Apr 27, 2024 10:16 AM GMT
Report

மை அழியாததால் மூதாட்டி ஒருவர் வாக்களிக்க முடியாத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழியாத மை 

கேரள மாநிலம் சொர்னூர் குளப்புள்ளியை சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக 2016-ம் ஆண்டு கேரள சட்டமன்ற தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது அவரது ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டுள்ளது.

அழியாத மை.. புரியாத புதிர் - 8 ஆண்டுகள் ஓட்டு போட முடியாமல் தவிக்கும் மூதாட்டி! | Ink Mark Doesnot Fade Even After 8 Years

இந்த மை 8 ஆண்டுகளாக மறையாமலேயே இருந்து வருகிறது. அவர் சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனாலும் மை அழியவில்லை. 

மூட்டை தூக்கும் முன்னாள் அமைச்சர்; வைரலாகும் வீடியோ - என்ன நடந்தது?

மூட்டை தூக்கும் முன்னாள் அமைச்சர்; வைரலாகும் வீடியோ - என்ன நடந்தது?

ஏமாற்றம் 

இதனால் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் உஷா வாக்களிக்கவில்லை. இதனால் பிரச்சனை ஏதும் ஏற்படுமோ என்று கருதி அவர் வாக்களிக்கவில்லை. தேர்தல் ஆணையமும் அவரை வாக்களிக்க வைக்க நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. 

அழியாத மை.. புரியாத புதிர் - 8 ஆண்டுகள் ஓட்டு போட முடியாமல் தவிக்கும் மூதாட்டி! | Ink Mark Doesnot Fade Even After 8 Years

இந்நிலையில் நேற்று கேரளாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் உஷா வாக்களிக்க செல்லவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில் "ஓட்டு போட முடியாததால் நான் தொடர்ந்து ஏமாற்றம் அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.