திட்டமிட்ட செயல் - எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி - சின்னம் விவகாரம் - சீமான்

Naam tamilar kachchi Seeman
By Karthick Mar 04, 2024 11:39 AM GMT
Report

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததை அடுத்து சீமான் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்து வருகின்றார்.

சின்னம் விவகாரம்

தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்துப் பேசினார்.

injustice-for-me-in-symbol-allocation-seeman

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியது வருமாறு, கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் 71 வாக்குகளைப் பெற்றுள்ள ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்குத்தான் என்று தெரிவித்து, அந்தக் கட்சி கர்நாடகாவில் கேஸ் சிலிண்டர் சின்னத்திலும், ஆந்திராவில் கேஸ் ஸ்டவ் சின்னம் வங்கியிருந்தததை அக்கட்சியின் தலைவரே கூறியிருக்கின்றார் என்றார்.

கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கல'னா - இது தான் என்னோட பிளான்..? சீமான் அதிரடி

கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கல'னா - இது தான் என்னோட பிளான்..? சீமான் அதிரடி

முதலில் கரும்பு விவசாயி சின்னத்தை தான் கேட்கவில்லை என்றும் அவர்களாகவே கொடுத்தார்கள் என்று தெரிவித்த சீமான், உள்ளாட்சித் தேர்தலில் துவங்கி இடைத்தேர்தல், சட்டமன்றம் மக்களவைத் என அனைத்திலும் இச்சின்னத்தில் தான் போட்டியிட்டோம் என்றும் கூறினார்.

injustice-for-me-in-symbol-allocation-seeman

தேர்தல்களில் 7 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறோம் என்றும் திமுக, அதிமுகவுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சிதான் என உறுதிபட தெரிவித்த சீமான், அதை கணக்கில் கொள்ளாமல், அவர் முதலில் மனு கொடுத்ததாக கூறுகின்றனர் என சாடினார்.

injustice-for-me-in-symbol-allocation-seeman

வெள்ள பாதிப்பு பணிகள் காரணமாகவே தாங்கள் மனு அளிக்க கால தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்த அவர், இருப்பினும் ஆணையத்தின் கால அளவிலேயே மனு அளிக்கப்பட்டதாகவும் இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகவே தான் கருதுவதாக குற்றம் சாட்டினார். மேலும், இது தங்களுக்கு திட்டமிட்டே இழைக்கப்பட்ட அநீதி என்றும் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.