தப்பி தவறிக்கூட இதெல்லாம் முகத்தில் பயன்படுத்தாதீர்கள்? சருமத்திற்கே ஆபத்தாக முடியலாம்!!
முகம் அழகாக தெரியவேண்டும் என்பது அனைவருக்குமே இருக்கும். இதில் பெண்கள் கூடுதல் கவனம் செலுத்துக்கிறார்கள். ஆண்களும் இதில் விதிவிலக்கல்ல என்ற காரணத்தால் பல அப்படிப்பட்டவர்களை குறிவைத்து பல கெமிக்கல் கலந்த அழகு சாதனா பொருட்கள் சந்தைக்கு வந்துவிட்டன.
அதே போல, பாரம்பரியமான மருத்துவ முறையில் இது வழங்கப்படுகிறது என சில பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அப்படி சந்தையில் அழகிற்காக விற்கப்படும் சில பொருட்களை பயன்படுத்தவே கூடாது என தகவல்களும் வெளிவந்துள்ளது.
அவற்றுள் சிலவற்றை தற்போது காணலாம்.
1 - புரோபிலீன் கிளைகோல்
ஆல்கஹால் போன்ற பண்புகளைக் கொண்ட தெளிவான, மணமற்ற, ஆவியாகாத, எண்ணெய் திரவம் இந்த புரோபிலீன் கிளைகோல்(Propylene glycol). இது ஹைக்ரோஸ்கோபிக்(hygroscopic) இருக்கும் காரணத்தால், இந்த கெமிக்கலை பயன்படுத்தி உருவாக்கப்படும் கிரீம்கள் தோலின் மேற்பரப்பை ஈரப்பதமாக வைத்திருந்தாலும், அடுத்தடுத்த தோல் உருவாவதைத் தடுக்கிறது.
நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மை கொண்ட காரணத்தால், இவற்றை தவிர்ப்பது அறிவுறுத்தப்படுகிறது.
2 - லினூல் - Linalool
வாசனை திரவங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் லினூல் சிட்ரஸ் அதிகமாக இருக்கும் பொருளாகும். தோல் பராமரிப்புப் பொருட்களிலிருந்து ACD ஏற்படுவதற்கான பொதுவான காரணம்.
ACD என்றால் அலேர்ஜிக் என பொருள். லினாலூல் ஆக்சைடுகள் 5-7% மக்களில் ஏசிடியை ஏற்படுத்துகின்றன. லிமோனீன் மற்றும் அதன் ஆக்சைடுகள் 3% க்கும் அதிகமாக இருக்கும் நிலையில், அது பலருக்கும் அலேர்ஜிக்காக முடியும் என்றே கூறப்படுகிறது.
3 - இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இவை முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவுகிறது.
முகத்தில் இருந்து பருக்கள் நீங்க இலவங்கப்பட்டை மற்றும் பிரியாணி இலை ஃபேஸ் பேக்கை வாரம் இரு முறை தடவுவது நன்மை தரும். ஆனால், அதே நேரத்தில் அதிக பயன்பாடு அலேர்ஜிக்கில் முடிவடையும் என சொல்லப்படுகிறது.
4 - எலுமிச்சை சாறு
முகப்பருக்களை வேகமாக நீக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது எலுமிச்சை சாறு. ஆனால், எலுமிச்சை என்பது அமிலத்தன்மை அதிகமாக கொண்டுள்ளது என்பதை மாறக்கூடாது.
சிட்ரிக் தன்மையே அதிகமாக இருக்கும் இந்த எலுமிச்சை சாறு என்பது, முகத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு : இவை அனைத்தும் இணையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளே. ஊடகத்தின் கருத்துக்கள் அல்ல.