பிறந்த சில மணி நேரத்திலேயே..உடலில் வெட்டு காயத்துடன் வீசப்பட்ட குழந்தை - பகீர் தகவல்!

Tamil nadu Crime Sivagangai
By Swetha Oct 23, 2024 07:30 PM GMT
Report

பச்சிளம் குழந்தை ஒன்று படுகாயத்துடன் சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சாலையில், ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அதை கேட்ட அப்பகுதி மக்கள் என்னவென்று பார்த்தப்போது, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கழுத்து மற்றும் கையில் அறுபட்ட நிலையில் சாலையோரத்தில் கிடந்துள்ளது.

பிறந்த சில மணி நேரத்திலேயே..உடலில் வெட்டு காயத்துடன் வீசப்பட்ட குழந்தை - பகீர் தகவல்! | Infant Was Found On Road With Cuts In The Body

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு, மருத்துவர் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தார்.

விழுப்புரம் அருகே சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை - உயிருடன் மீட்பு!

விழுப்புரம் அருகே சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை - உயிருடன் மீட்பு!

பகீர் தகவல்

இந்த நிலையில், தொப்புள் கொடியுடன் கழுத்து மற்றும் கையை அறுத்து குழந்தையை வீசிச் சென்றது தாயா அல்லது யார் என்பது குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.    

பிறந்த சில மணி நேரத்திலேயே..உடலில் வெட்டு காயத்துடன் வீசப்பட்ட குழந்தை - பகீர் தகவல்! | Infant Was Found On Road With Cuts In The Body

இதுகுறித்து குழந்தையை மீட்ட நபர் தெரிவிக்கையில், ''குழந்தை கீழே கிடப்பதாக கத்தினார்கள். நான் சென்று பார்த்தபோது சந்து இடுக்கில் மண்ணுக்குள்ளே குழந்தை கிடந்தது. பார்த்தவுடனே தூக்கிக்கிட்டு ஹாஸ்பிடல் வந்து விட்டேன்.

குழந்தை உயிர் பிழைச்சா போதும் சார். குழந்தையை பார்த்த உடனே காப்பாற்ற வேண்டும் என்று தான் தோணுச்சு மற்றவர்கள் போல கத்திக் கொண்டிருக்க மனம் நினைக்கவில்லை'' என்றார்.