இனி கடைகளில் தமிழில்தான் பெயர் பலகை இருக்கனும்; இல்லையெனில்.. முக்கிய உத்தரவு
தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பெயர் பலகை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகள் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதி 15ன் படி தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்.
இதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ள அறிவிப்பில், கிருஷ்ணகிரியில் வரும் மே மாதம் 15ஆம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழில் அனைத்து கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகை அமைப்பதை உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆட்சியர் உத்தரவு
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அனைத்து நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் அமைப்பது தொடர்பான வழிமுறைகளை கடைப்பிடித்திட வேண்டும்.
நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகைகளை மே 15க்குள் தமிழில் வைத்திட வேண்டும். அதன் பிறகும் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.