இனி வெறும் 4 மணி நேரம்தான்; சென்னை- திருச்சி ரயில் வேகம் அதிகரிப்பு
சென்னை- திருச்சி இடையே ரயில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை- திருச்சி
சென்னை – விழுப்புரம் – விருத்தாசலம் திருச்சி பிரிவில் ரயில்கள் 90 கிமீ முதல் 100 கிமீ வரையிலான வேகத்திலேயே இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், முக்கிய பாதைகளில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன.
வளைவுகளை நீக்குவது, பழைய பாலங்களை மேம்படுத்துவது, பழைய ரயில் பாதைகளை புதுப்பிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர, தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பாதைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படுகிறது.
ரயில் வேகம் அதிகரிப்பு
செங்கல்பட்டு – சென்னை எழும்பூர் தடத்தில் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால், திருச்சி – விழுப்புரம் தடத்தில் மணிக்கு அதிகபட்சமாக 90 - 100 கி.மீ. வேகத்தில் செல்கின்றன.
எனவே, இந்த தடத்தில் ரயில்கள் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், தேவையற்ற வளைவுகளை நீக்குவது, பழைய பாலங்களை மேம்படுத்துவது அல்லது புதுப்பிப்பது, சிக்னல் தொழில்நுட்பத்துடன் ரயில் பாதைகளை புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
எனவே, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் இந்த பணிகளும் முடித்து, தென்மாவட்ட ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். இதனால், பயண நேரம் 30 முதல் 40 நிமிடங்கள வரை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.