காலையே மக்களுக்கு ஹாப்பி நியூஸ் - மீண்டும் குறைக்கப்பட்ட சிலிண்டர் விலை!!
19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டின் சிலிண்டரின் விலை மீண்டும் குறைந்துள்ளது.
சிலிண்டர் விலை
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கணிசமான விலையில் ஹோட்டல்களும் விலையை உயர்தின. இது மக்களிடடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.
மக்களின் கடும் கண்டங்களுக்கு பிறகு, தொடர்ந்து 4 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைக்கப்படுகிறது. அதன் படி இம்மாதமும் 39 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பு
வணிக பயணப்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 1840 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. அவ்விலை தற்போது 39 ரூபாய் குறைந்து குறைக்கப்பட்டு 1809 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹோட்டல் உணவுகளின் விலை கணிசமான நிலையில் குறையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 4 மாதங்களாக இது வரை 151 ரூபாய் சிலிண்டரைன் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதே நேரத்தில், வீட்டு சிலிண்டரின் விலை குறைப்பு இன்றி 818.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது.