அடுத்தடுத்து வரும் ஹேப்பி நியூஸ்...மீண்டும் குறைக்கப்பட்ட சிலிண்டர் விலை!!
ஏற்கனவே சிலிண்டர் விலையில் 200 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 100 ரூபாய் விலை குறைப்பிற்கு மத்திய அரசி அமைச்சரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் 100 ரூபாய் குறைப்பு
தற்போது வீட்டு பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டரின் விலை மே மாதத்தில் இருமுறையும், ஜூலை மாதத்தில் 50 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டு நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சென்னையில் 1068.50 ருபாயாகவும், டெல்லியில் 1053 ரூபாயாகவும், மும்பையில் 1052.50 ரூபாயாகவும், தற்போது கேஸ் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின்போது நாடெங்கும் கேஸ் விலையில் 200 ரூபாய் குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஒட்டு மொத்தமாக கேஸ் சிலிண்டரின் விலையை குறைப்பு செய்வதன் மூலமாக அரசுக்கு ரூ. 7500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், கேஸ் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை குறைந்த போதிலும், சிலிண்டரின் விலை குறைக்கப்படாமல் இருந்து வந்தது.
தேர்தலுக்கான நடவடிக்கையா?
இது தேர்தலுக்கான நடவடிக்கை என பல எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில், இன்று மீண்டும் 100 ரூபாய் சிலிண்டரின் விலையில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 14.2 கிலோ எடை கொண்ட இந்த சிலிண்டர் ரூ.703 ஆக விற்கப்பட்டது.
தற்போது விலை குறைப்பு காரணமாக பொது மக்களுக்கு ரூ.603க்கு கிடைக்கும். அதேநேரத்தில் வெளிச்சந்தையில் ரூ.903 க்கு
விற்பனையாகிறது.
இந்த ஆண்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களும், அடுத்த ஆண்டின் முதல் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலும் நடக்கவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.