பிரதமராக மோடி பதவியேற்பு - பற்றி எறிந்த பாஜக அலுவலகம்
நரேந்திர மோடி நேற்று (09.06.2024) மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.
பிரதமர் மோடி
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 292 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து, நரேந்திர நேற்று (09.06.2024) இரவு 7:30 மணியளவில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
அவருடன் சேர்ந்து 72 பேர் அடங்கிய அமைச்சரவையும் பதவி ஏற்று கொண்டது. அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
பாஜக அலுவலகம்
இந்நிலையில் மோடி மீண்டும் பிரதமரானதை பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பாஜக கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
[
#WATCH | Madhya Pradesh | Fire broke out at BJP office in Indore. Fire tenders reached the spot and controlled the fire. pic.twitter.com/0DHqrf5wrB
— ANI (@ANI) June 9, 2024
இநத கொண்டாட்டத்தின் பொது இரவு 9:30 மணி அளவில் அலுவலகத்தின் மேல் தளத்தில் தீப்பற்றி மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவ தொடங்கியது. சம்பவ இடத்துக்கு உடனே விரைந்த தீயணைப்புத் துறையினர் வேகமாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.