வெடித்து சிதறும் எரிமலை; சுனாமி எச்சரிக்கை - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ!

Tsunami Indonesia
By Sumathi Apr 18, 2024 11:09 AM GMT
Report

எரிமலை வெடித்து சிதறியதால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

எரிமலை வெடிப்பு

இந்தோனேசியா, ருவாங் மலை எரிமலை வெடித்து சிதறியதில், வானில் ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு எரிமலைக் குழம்புகள் பரவியது.

volcano eruption

3 முறைக்கு மேல் வெடித்துள்ள நிலையில் அதில் இருந்து எரிமலை குழம்புகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றன. பல நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்த நிலையில் தற்போது வெடித்து சிதறியுள்ளது.

ஒரே நாளில் நாட்டை உலுக்கிய 155 நிலநடுக்கங்கள்; சுனாமி எச்சரிக்கை - 16 அடி உயரத்துக்கு எழுந்த அலைகள்!

ஒரே நாளில் நாட்டை உலுக்கிய 155 நிலநடுக்கங்கள்; சுனாமி எச்சரிக்கை - 16 அடி உயரத்துக்கு எழுந்த அலைகள்!

சுனாமி எச்சரிக்கை

இதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 11,000-க்கும் அதிகமான மக்கள் ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

மேலும், 2,378 அடி ருவாங் எரிமலையிலிருந்து குறைந்தது 6 கிலோமீட்டர் தொலைவில் விலகியிருக்குமாறு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எரிமலை வெடிப்புகள் மேலும் எதிர்பார்க்கப்படுவதால், அங்கிருந்து சுமார் 4 கிமீ சுற்றளவுக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். 27 கோடி மக்கள் வசிக்கும் இந்தோனேசியாவில் 120 செயல்படும் எரிமலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.