நியூசிலாந்தை அதிரவிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!

Tsunami New Zealand
By Vinothini May 19, 2023 10:03 AM GMT
Report

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பிஜி, வானாட்டு, நியூ ஜெனியா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

tsunami-alert-in-newzealand

இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது, இதனை தொடர்ந்து பிஜி உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலில் 1.5 அடி அளவில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் உருவாகியுள்ளது, இதனால் மேலும் சுனாமி உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

இந்நிலையில், வானாட்டுவின் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

tsunami-alert-in-newzealand

மேலும், இந்த நிலநடுக்கம் பசிபிக் பகுதியில் உள்ள பிஜியின் தென்மேற்கிலும், நியூசிலாந்தின் வடக்கிலும், ஆஸ்திரேலியாவின் கிழக்கிலும் உள்ள லாயல்டி தீவுகளுக்கும் இடையில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இது கடலில் 37 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.