ஒரு வருசமா டேட்டிங் - ஆண் என்று தெரியாமலேயே திருமணம்! வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
வினோதமான நிகழ்வாக இந்தோனேசிய வாலிபர் ஒருவர் தனக்கு திருமணமான 12 நாட்களுக்குப் பிறகு, ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்து கொண்டிருந்த தனது மனைவி உண்மையில் பணத்திற்காக தன்னை மோசடி செய்ய முயற்சிக்கும் மற்றொரு ஆண் என்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்த சம்பவம் இந்தோனேசியா நாட்டில் நடந்துள்ளது. திருமணத்திற்கு முன்னர் இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருடம் டேட்டிங் செய்திருக்கிறார்கள். ஒரு வருடமாக பழகி வந்த பிறகும், சாதாரணமாக இருவரும் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.
அப்போதும் நம் ஹீரோக்கு அவள் அவள் அல்ல, அவன் என்று தெரியவில்லை. 2023-ஆம் ஆண்டில் ஆதிண்டா கன்சா (26) என்ற பெண்ணை சமூகவலைத்தளம் வாயிலாக சந்தித்துள்ளார் நம் ஹீரோ.
ஆன்லைனில் chatting பிறகு, இருவருமே நேரில் சந்திக்க முடிவு எடுத்துள்ளனர். முஸ்லீம் என்பதை காரணமாக வைத்து கன்சா சந்திக்கும் போது, தனது முழு முகத்தையும் தான் ஒரு தன்னை ஒரு பக்தியுள்ள முஸ்லீம் என்றும் கூறி தன் அடையாளத்தை மறைத்து கொண்டுள்ளார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்த பிறகு, இருவரும் தங்கள் திருமணத்தைத் திட்டமிட முடிவு செய்தனர், அப்போது கன்சா திருமணத்தில் கலந்துகொள்ள தனக்கு குடும்பம் இல்லை என்று கூறினார். கன்சா 5 கிராம் தங்கத்தை வரதட்சணையாகக் கொண்டு வந்திருக்கிறார்.
கன்சா தனது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள மறுத்ததையும், வீட்டில் தனது முக்காடு அணிந்த பாரம்பரிய உடையை தொடர்ந்து அணிவதையும் நம் ஹீரோ கவனித்தபோது, திருமணமான இரண்டு வாரங்களுக்குள் சந்தேகங்கள் எழுந்தன. கன்சா தனது கணவருடன் நெருக்கத்தைத் தவிர்ப்பதற்கு பல்வேறு காரணங்களை கூறியிருக்கின்றார்.
இது மேலும் சந்தேகத்தை உண்டாகியுள்ளது. கன்சாவின் குடும்ப முகவரியை தேடி கண்டுபிடிக்க நம் ஹீரோவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருந்துள்ளன.
கன்சா சொன்னதை போல அவள் அனாதை இல்லை என்று அறிந்து அதிர்ந்த ஹீரோக்கு, அவள் அவளே இல்லை அவன் என தெரிந்ததுமே உலகமே இருண்டுள்ளது.
தனது குடும்பத்தின் சொத்துக்களை திருடுவதற்காக இது போன்ற ஒரு நாடகத்தை நடத்தி தன்னை ஏமாற்றியதாக ஹீரோ கண்டுபிடித்திருக்கிறார்.