திருமணம் கடந்த தகாத உறவுக்கு தடை.. மீறினால்? அரசு அதிரடி!
திருமனம் கடந்த பாலியல் உறவுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
தகாத உறவு
இந்தோனேசியாவில் சுமார் 27 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இஸ்லாமியர்களே பெரும்பான்மையாக உள்ளனர். இந்நிலையில், குடியரசு நாடான இந்தோனேசியாவில், கணவன் - மனைவி என இருவரும்

தங்கள் வெளிநபர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டால் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் விரைவில் அமலாக உள்ளது. இதுகுறித்த சட்ட மசோதா கடந்த 2019-ம் ஆண்டே அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
தடை
அப்போது அந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், இந்த மசோதா வரும் 15ஆம் தேதி நிறைவேற்றப்படும். திருமணத்துக்கு அப்பால் பாலியல் உறவு வைத்துக் கொள்வதும், திருமணத்திற்கு முன் இணைந்து வாழ்வதும் சட்டவிரோதம். இதன் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என் அந்நாட்டு நிதி அமைச்சர் எட்வர்ட் உமர் ஷெரீப் ஹியாரிஜ் தெரிவித்துள்ளார்.