16வயது சிறுமிக்கு திருமணம்..பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தி பிளேடால் முகத்தை கிழித்து வெறிச்செயல்!
சிறுமியை திருமணம் செய்து உறவுக்கு கட்டாயப்படுத்தி இளைஞர் பிளேடால் முகத்தை கிழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிறுமிக்கு திருமணம்
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சிறுமி கோபத்தில் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் சிறுமி இருக்கும் இடத்திற்குச் சென்று அவரை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சிறுமி மறுத்ததாக கூறப்படுகிறது.
கணவன் வெறிச்செயல்
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த பிளேடால் சிறுமியின் முகத்தை கிழித்துள்ளார். இதில் சிறுமி பலத்த காயமடந்துள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனியில் அனுமதித்துள்ளனர்.
அதனையடுத்து உறவினர்கள் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தனர். அதன் அடிப்படையில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.