பள்ளி கட்டடம் இடிந்து விபத்து; தொடரும் துயரம் - 67 பேர் பலி!
பள்ளி கட்டடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
பள்ளி விபத்து
இந்தோனேஷியாவின் சிடோவார்ஜோ நகரில் அல் கோசினி என்ற முஸ்லிம் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சமீபத்தில் அடுக்குமாடி கட்டடத்தின்
ஒரு பகுதியில் மாணவர்கள் தொழுகையில் ஈடு பட்டிருந்தபோது, கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. அதில் அப்படியே நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதைந்தனர்.
61 பேர் பலி
தற்போது அதில் பலி எண்ணிக்கை 67 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், 12 முதல் 19 வயதுக்குட்பட்டோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டட இடிபாடுகளுக்குள் பல மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.